(வி.ரி.சகாதேவராஜா)
2020 ஆம் ஆண்டின் தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் இலங்கையில் Maps வைத்தியசாலைகளுள் கல்முனை ஆதார வைத்தியசாலை, இரண்டாம் இடத்தை பெற்றுச்சாதனை படைத்துள்ளது.
குறித்த போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய நிறுவனங்களை விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15.12.2022) வியாழக்கிழமை
கொழும்பு அலரி மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய மட்டத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் கல்முனை ஆதார வைத்தியசாலையானது அரச திணைக்களங்களுக்கான பிரிவில், இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
வைத்தியசாலைகள் பிரிவில் இந்த வைத்தியசாலைக்கு மாத்திரமே இரண்டாம் இடம் கிடைக்கப்பெற்றது.
இதைத்தவிர வேறு எந்த வைத்தியசாலைகளும் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விருதை பிரதமர் தினேஸ் குணவர்தன கலந்து கொண்ட நிகழ்வில் கல்முனை ஆதாரவைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரன் தலைமையிலான குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை ,
இவ் வெற்றிக்கு அனைத்து வகையிலும் வழிகாட்டிய வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி. டாக்டர் இரா.முரளீஸ்வரன் அவர்களுக்கும் பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜெ.மதன் அவர்களுக்கும் தரமுகாமைத்துவப் பிரிவு மற்றும் சேர்ந்து பணியாற்றிய அனைத்து வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கும் நன்றி கூறும் வைபவம் நேற்று (16) வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment