( வி.ரி. சகாதேவராஜா)
சேவைக்கு இலக்கணமாக திகழ்ந்த மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதனின் இழப்பு தமிழ் தேசியத்திற்கான பேரிழப்பாகும்.
இவ்வாறு இலங்கை உள்ளூராட்சி சம்மேளனத்தின் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(1) மரணமான களுதாவளையைச் சேர்ந்த தவிசாளர் ஞா.யோகநாதன் இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளையின் தந்தையார். அவர் மரணிக்கும் போது வயது 59 .
உப தவிசாளர் ரஞ்சனி கனகராசா தலைமையில் சபையில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
களுதாவளை சிறீ முருகன் கோவில் தலைவராகவும்
ரெலோவின் மத்திய குழு உறுப்பினராகவும்
ம.தெ.எ.பற்று பிரதேச சபை தவிசாளராகவும் இருந்து பாரிய மக்கள் சேவையாற்றி உள்ளார்!
இறுதிக்கிரியை வரும் ஞாயிறு 04.12.2022 பிற்பகல் அவரது களுதாவளை இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில் தவிசாளர் ஜெயசிறில் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...
தவிசாளர் பதவியில் இருக்கும் பொழுதே அவர் புகழுடம்பை எய்தி இருக்கின்றார் .அவரது சேவைகள் அப்பிரதேச மக்களால் என்றும் மறக்க முடியாது. மறக்கவும் முடியாது எமது சம்பந்தத்தில். எமது சம்மேளனத்தில் அவரது பங்களிப்பு மிகவும் கூடுதலான இருந்தது. அன்னாரது ஆத்மா சாந்தியடைவதாக.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது
ஆழ்ந்த அனுதாபங்கள்.
Post a Comment
Post a Comment