பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் பரிந்துரைக்கமைய உள்ளுராட்சி நிறுவனங்களின் தொகுதிகளை வரையறுப்பது தொடர்பில் ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
தேசிய எல்லை நிர்ணய குழுவிற்கு பரிந்துரைகளை மேற்கொண்டு உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையினை 8000 ஆயிரத்தில் இருந்து 4000 ஆயிரம் வரை குறைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டே உள்ளுராட்சி சபைகளினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வட்டாரங்களை 10 இலிருந்து 5 ஆக குறைப்பது தொடர்பிலாக சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை அறியும் கூட்டமொன்று பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் கண்ணதாசன் பிரதேச சபை தொழிநுட்ப உத்தியோகத்தர் பிரதேசத்தின் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நோக்கம் பற்றி கருத்து வெளியிட்ட பிரதேச சபை தவிசாளர் அரச வர்த்தமானிக்கு அமைய எதிர்வரும் 10 நாட்களுக்குள் வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்து அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் இது தொடர்பில் தம்மால் உத்தேசமாக மீள்நிர்ணயம் செய்யப்பட்டு பிரிக்கப்பட்டுள்ள 5 வட்டாரங்களின் எல்லைகள் தொடர்பிலும் விளக்கமளித்தார். மேலும் இது தொடர்பில் வருகை தந்தவர்களது கருத்தினை வெளியிட்டு பொருத்தமான இறுதி வரைபினை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் அரச சுற்றுநிருபங்களுக்கு அமைய தமது பணி முன்னெடுக்கப்படும் எனவும் வட்டார எல்லை தொடர்பில் பிரதேச சபையோடு இணைந்து பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் தீர்மானத்திற்கு அமைய மேற்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஆயினும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததுடன் பிரதேச சபையின் எல்லைகளில் மிகக்கவனமாக செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். கடந்த காலத்தில் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் விட்ட தவறை இனிவரும் காலங்களில் மேற்கொள்ள முடியாத வகையில் மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் தற்போதுள்ள பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளருடன் இணைந்து அவர்கள் முன்வைக்கும் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து அனைவரும் ஒன்றாய் பயணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இறுதியாக வட்டாரங்களின் மீள்நிர்ணயம் தொடர்பில் இறுதி முடிவினை எடுக்கும் நோக்கில் குழுவொன்று நியமிக்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள வட்டார பிரதிநிதிகளோடு பொதுமக்கள் சார்பிலும் சிலரை இணைத்து குழுவொன்று தெரிவு செய்யப்பட்டது.
இக்குழுவின் ஊடாக இறுதி பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு பிரதேச செயலகத்தின் கருத்துகைளயும் உள்வாங்கி முடிவு மேற்கொள்ளப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment