நாவலர் புகழ் விருது மற்றும் கௌரவம்




 


வி.ரி.சகாதேவராஜா)

 
நாவலர் ஆண்டிலே – ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் திருவாவதாரம் செய்த இருநூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டுடனும் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை மற்றும் யாழ். மாநகர சபையின் சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டுடனும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு இனிதே நிகழ்ந்தேறியது.
கடந்த டிசம்பர் மாதம் 14, 15, 16 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நாவலர் பெருமான் அவதரித்த  புனித பதியிலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நிகழ்ந்தேறியது. நாவலர் பெருமானின் குருபூஜை நன்னாளிலே ஆரம்பமாகி ஜனன தின நாளிலே நிறைவு கண்ட இம்மாநாட்டு நிகழ்வுகள் நல்லூர்ப் பதியிலே நாவலர் மணிமண்டபம், நாவலர் கலாசார மண்டபம், ஸ்ரீ துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபம் ஆகிய இடங்களிலே ஆன்மிக அரங்கு, பொது அரங்கு, ஆய்வரங்கு எனப் பல அரங்குகளாக இனிதே  நிகழ்ந்தேறின.
இந்த மாநாட்டின் நிறைவு நாள் வைபவத்திலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்து, சமூகத்தில் அர்ப்பணிப்பு மிக்க செயலாற்றிவரும் பாங்கினைப் பாராட்டி, ஈழத்தவர்கள்  மற்றும்  பாரத தேசத்தவர்கள்   நாவலர் புகழ் விருது மற்றும் நாவலர் புகழ் விசேட கௌரவம் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
அந்த வகையிலே  தமிழ் இலக்கியப் பணியில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து ஆளுமை மிக்கவராய் வலம் வரும் கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் இலக்கியப் பணிக்கான நாவலர் புகழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  
ஆன்மிகப் பலம் வழிநடத்த, சிறந்த சமூக சேவையாளனாய்  செயல் வீரனாய்த் திகழும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் ஆற்றிவரும் அனைத்துத் துறை சார்ந்த பணிகளையும் சமூகப் பணியாய்ப் பாராட்டி  சமூகப் பணிக்கான நாவலர் புகழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
புலம்பெயர் தேசத்தில் மட்டுமன்றி ஈழ தேசத்திலும் அர்ப்பணிப்பு மிக்கதும் ஆத்மார்த்தமானதுமான சமயப் பணி ஆற்றிவரும்       கனடா சைவ சித்தாந்த பீட இயக்குநர், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அவர்கள்  சமயப் பணிக்கான நாவலர் புகழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
அற்புதம் நிறைந்த ஓவியப் பணியால் திறம்படக் கலைப்பணி ஆற்றிவரும் உலகப்புகழ் பெற்ற ஓவியர் திருமிகு மு.பத்மவாசன் அவர்கள்  கலைப் பணிக்கான நாவலர் புகழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இளைய தலைமுறையின் அர்ப்பணிப்பான சேவை இந்தச் சமூகத்திற்கு எப்போதும் தேவை