ஜங் பிளவர் விளையாட்டுக்கழகம் நுளம்பு வலையினை வழங்கியது




 


வி.சுகிர்தகுமார் 

 ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவுகளில் டெங்கின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் சோதனை நடவடிக்கைகளும் டெங்கின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் செயற்பாடுகளிலும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து சமூக சேவை அமைப்புக்களும் விளையாட்டுக்கழகங்களும்  ஈடுபட்டு வருகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று ஜங் பிளவர் விளையாட்டுக்கழகம் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவளித்துவரும் நிலையில் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு நுளம்பு வலைகளும் இன்று வழங்கியது.

அக்கரைப்பற்று 9 மற்றும் அக்கரைப்பற்று 8ஃ3  அக்கரைப்பற்று 8 ஆகிய பிரிவுகளில் டெங்கொழிப்பு விழிப்புணர்வு அறிவித்தலை வழங்கியதுடன் இப்பிரிவுகளில் வாழும் சில குடும்பங்களுக்கு தனவந்தர் க.நித்தியானந்தம் அவர்களின் உதவியோடு நுளம்பு வலைகளும் வழங்கி வைக்கப்பட்டன. 8 3இல் அமைந்துள்ள பாவேந்தர் சனசமூக நிலைய மண்டபத்தில் கழக தலைவர் ஜோன் பெற்றிக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அத்தோடு விழப்புணர்வு கருத்துக்களையும் மக்களுக்கு வழங்கினர்.

இதேநேரம் ஆலையடிவேம்பில் அதிகமானோர் டெங்கின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளாகியுள்ள நிலையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலனின் உத்தரவிற்கு அமைய பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குடியிருப்புக்கள் பாடசாலை கட்டடங்கள் பொது இடங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் சிலருக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டதுடன் 48 மணித்தியாலங்களுக்குள்  துப்பரவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு இடப்பட்டதுடன்   டெங்கு பரவும் அபாய இடங்களாக  சில குடியிருப்புக்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்;டது.