ஜெயந்தி தின விழா




 


( சகா)


 இராமகிருஷ்ண மிஷன் தூயஅன்னை ஸ்ரீ சாரதாதேவி அம்மையாரின் 170 ஆவது ஜெயந்தி தின விழா காரைதீவில் நேற்று (14) புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த இல்லத்தில் அன்னையின் ஜெயந்தி விழா இடம் பெற்றது

 மணிமண்டப செயலாளரும் கலாச்சார உத்தியோகத்தருமான கு. ஜெயராஜ் தெய்வத் திருமூவருக்கு பஞ்சாரத்தி காட்டி  விசேட பூஜை நடத்தினார்.

சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் முன்னாள் தலைவர், வி.ரி.சகாதேவராஜா ஓய்வு நிலை அதிபர் கே.புண்ணியநேசன் மட்டக்களப்பு இந்து கலாச்சார உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார் காரைதீவு கலாச்சார உத்தியோகத்தர் திருமதி சிவலோஜினி மற்றும் இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.