கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு வந்துகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் அரியாலையில் புங்கங்குளம் ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற கடவையை கடந்த பேருந்து மீது மோதியதில் பேருந்து சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (01) நண்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் அரியலை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ரயிலின் இயந்திர பகுதியில் சேதம் ஏற்பட்டதால் மற்றொரு Locomotive M4 இன்ஜின் கொண்டுவரப்பட்டு இழுத்து செல்லப்பட்டது.
Post a Comment
Post a Comment