அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியின் முதலாவது ஹாபிழாவிற்கான கௌரவிப்பு நிகழ்வு.
அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியின் அல்குர்ஆன் மனன பீட பிரிவின் முதலாவது ஹாபிழாவாக M.A.Maryam Leena அவர்கள் பதிவாகியுள்ளார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் A.Maryam Leena அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் Dr. M.A.Mohamed Anas(MBBS)மற்றும் அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா தேசிய பாடசாலையில் கடமை புரியும் ஆசிரியை U.L.Zinis தம்பதிகளின் மூத்த புதல்வியுமாவார்.
இம் மாணவியை கௌரவித்து நினைவு சின்னம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,
இம் மாணவி மனனமிட அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அல் ஹாபிழ் Dr. M.I.M.Siddek அவர்களுக்கும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வு 2022.12.03 நேற்று சனிக்கிழமை மாலை அதன் நிறைவேற்று பணிப்பாளர் அஷ்ஷெய்க் N.M.Nishad ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று அந்-நூர் சமூக கலாசார அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து வெளியாகிய
மர்யம் லீனாவிற்கான கௌரவிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Post a Comment
Post a Comment