பங்களாதேஷ் பதம் பார்த்தது இந்தியாவை




 


இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 40 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை எடுத்து ,ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் சென்றுள்ளது.

அண்மையில் நடந்த நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த அணிதலைவர் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர். முன்னணி வீரர்கள் திரும்பி இருப்பதால் அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது.

.இந்நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா ,ஷிகர் தவான் களமிறங்கினர்.

தொடக்கத்தில் தவான் , 7 ஓட்டங்களிலும் , ரோகித் சர்மா 27 ஓட்டங்களிலும் வெளியேறினர்.பின்னர் வந்த விராட் கோலி 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் கே.எல்.ராகுல் மாத்திரம் சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தார். நிதானமாக விளையாடிய அவர் அரைசதம் அடித்தார்.மறுபுறம் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக  ராகுல் 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷ் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும் ,எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 187 ஓட்டங்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி விளையாடியது.

இதையடுத்து 187 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.

முதல் ஓவரிலேயே சாண்டோ விக்கெட்டை தீபக் சாஹார் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய அணி தலைவர் லிண்டன் தாஸ் 41 ஓட்டங்களுக்கும் ஷகிப் ஆல் ஹாசன் 29 ஓட்டங்களுக்கும், ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது 136 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இருந்ததால் வெற்றி இந்திய அணியின் பக்கம் இருந்தது

 

கடைசி விக்கெட்டுக்கு ஹாசன் மிர்ஸ் மற்றும் முஸ்தாபிசுர் ரகுமான் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

கடைசி விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் .. 50 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்து வங்கதேச அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர். பரபரப்பாக சென்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று ,ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.