நூருள் ஹுதா உமர்
எமது பாரம்பரியமும் ஆரோக்கியமும் என்ற மகுடத்திலான விழிப்பூட்டல் கண்காட்சி காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஆகியன இணைந்து நடத்திய இக்கண்காட்சியில் பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம். சி. எம். காலித் ஆகியோர் க்ண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகதீசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். காரைதீவு பிரதேசத்தில் இருந்து மாத்திரம் அல்லாமல் அண்டிய பிரதேசங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இதில் பங்கேற்று பயன் அடைந்தார்கள்.
Post a Comment
Post a Comment