காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயம் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை விருதினை பெற்றுக்கொண்டது.
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் காத்தான்குடி மட்/மம/ ஹிழுறிய்யா வித்தியாலயம் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலை மட்/மம/ ஹிழுறிய்யா வித்தியாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று (15 .12 .2022) கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இவ்விருதினை பாடசாலை முதல்வர் SI.யஸீர் அறபாத் அவர்களும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் ஜனாப். MIM.ஜௌபர் அவர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர். இவ்விருது உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் மனுஸ் நாணயக்கார அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
அதிபர்,
மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயம்
காத்தான்குடி.
Post a Comment
Post a Comment