( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை வலயத்திற்குட்பட்ட அட்டப்பளம் விநாயகர் வித்யாலயத்தில் பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு விழாவும் பாராட்டு விழாவும்
நேற்று முன்தினம் அதிபர் ச.ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச சபையின் உபதவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை எடுத்த முயற்சி காரணமாக 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அட்டப்பளம் விநாயகர் வித்தியாலயத்துக்கு வழங்கப்பட்டது .
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம் எஸ் எஸ் நஜீம் கலந்துசிறப்பித்தார். நட்சத்திர அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் உபதவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை கலந்து சிறப்பித்தார் .
மேலும் கல்முனை வலய கணக்காளர் வை.ஹபிபுள்ளா சிங்காரபுரி மாரியம்மன் ஆலய தலைவர் த. கோபாலன் உள்ளிட்ட அதிதிகள் சிறப்பித்தார்கள் .
அங்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு விழாவும் மற்றும் அதிதிகள் பாராட்டு விழாவும் இடம் பெற்றது .
பிரதி அதிபர் த.நடேசலிங்கம் விழாவை நெறிப்படுத்தினார்.
ஆசிரியர் சிவசுந்தரம் சிவகரனும் பாராட்டப்பட்டா
Post a Comment
Post a Comment