அக்கரைப்பற்று நீதிமன்றினால் ஐஸ் போதைப் பொருள் 9 கிராமும் 850 மில்லி கிராமும் வைத்திருந்தவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் கடந்த 3 மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.கடந்த முறை வீடியோ காணொளி மூலமாக ,அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டினை இந்தக் குற்றவாளி ஏற்றுக் கொண்டதை அடுத்து அவரது அடையாள மற்றும் தண்டணைத் தீர்ப்புக்காக இன்றைய தினம் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு ஒருவருட சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.
இந்த ஒரு வருடத்தில் முதல் 6 மாத கடுழிய சிறைத் தண்டனையும் மிகுதி 6 மாத காலச் சிறைத் தண்டணை 7 வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் இன்றைய தினம் விதிக்கப்பட்டுள்ளதுடன் ருபா 10 000.00 தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 70 வயது நிரம்பப் பெற்ற குறித்த குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஹம்சா அவர்களால் குறித்த தண்டனையும் அபாராதமும் விதிக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment