அறநெறி ஆசிரியர்களுக்கு சீருடை.




 


( வி.ரி. சகாதேவராஜா)


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  பொத்துவில் ,லாகுகல பிரதேச செயலகங்கள் இணைந்து நடாத்திய
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான    
கருத்தரங்கும்,  அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம்
பொத்துவில் பிரதேச செயலகத்தில் பொத்துவில் பிரதேச  செயலக கணக்காளர்   அப்துல் ரகுமான் 
தலைமையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்      வே.ஜெகதீஸன்  கலந்து கொண்டார்.
 இதில் லாகுகல பிரதேச செயலாளர்   ந.நவநீதராஜா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் சுபைர் மற்றும்
  கு.ஜெயராஜி
மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்,ந.பிரதாப் மாவட்ட இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்,
நாவிதன்வெளி  பிரதேச இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  க.நீலேந்திரன்
ஆகியோர் கலந்து  கொண்டனர்.
 
 இந்நிகழ்வில் திணைக்களத்தின் செயற்பாடுகள், அறநெறிப்பாடசாலைகளின்  செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பான நடவடிக்கைகள்,  புதிய பாடத்திட்டம்   தொடர்பான   கலந்துரையாடல்கள் எனபன இடம்பெற்றன.

 இதில் , பொத்துவில், லாகுகல அறநெறிப் பாடசாலை  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  கு.ஜெயராஜி மேற்கொண்டார்