அக்கரைப்பற்று - கல்முனையில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு




(Rep/Sukirthakumar)

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று  இடம்பெற்ற கார் வி ப த்தில் அக்கரைப்பற்றை சேர்ந்தவரும் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமைபுரியும்  சசீந்திரன் காலமானார். 

 அட்டப்பளம் பிரதான வீதி வாகன விபத்தில் அரச உத்தியோகத்தர் சசீந்திரன் பலி..
( வேத சகா)
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி அட்டப்பளம் பகுதியில் இன்று (15) பகல் ஒரு மணியளவில் மரத்துடனா மோதியதில் இடம்பெற்ற வாகன விபத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதம நிருவாக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றும் ஆ.சசிந்திரன் ( வயது 52)  உயிரிழந்தார்....

உயிரிழந்தவரின் உடல் கல்முனை அஷ்ரப்வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.....

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை நிந்தவூர் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்......