வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து இவ்வருடம் க.பொ.தராதர உயர்தரம் கற்பதற்கான தகுதியினை பெற்றிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
பாடசாலை நிருவாகத்தின் ஒத்துழைப்போடு பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் வளவாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் பிரதி அதிபர் ஜெயந்தன் மற்றும் மதியழகன் ஆகியோரது பங்கு பற்றுதலோடு நடைபெற்ற இக்கருத்தரங்கில் பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளரும் பிரதேச செயலாளருமான வி.பபாகரன் சங்கத்தின் உபதலைவரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்டத்திற்கான பொறியியலாளர் என்.லோகிஸ் சங்கத்தின் பொருளாளரும் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியருமான குணாளினி சட்டத்தரணி அனுஜா தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் கோபி உள்ளிட்டவர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் சங்கத்தின் உறுப்பினர்களான மேலதிக மாவட்ட பதிவாளர் பிரதீப் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான வி.சுகிர்தகுமார் அபிவிருத்தி உத்தியோகத்தர் புவனேந்திரன் மற்றும் பாடாசலையின் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது விளக்கமளித்த வளவாளர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் உயர்தரத்தில் கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ள மாணவர்கள் தெரிவு செய்யவேண்டிய பாடங்கள் தொடர்பிலும் அதன் மூலம் அடைந்து கொள்ளக்கூடிய இலக்குகள் மற்றும் அடைவு மட்டங்கள் தொடர்பிலும் தெளிவூட்டினர்.
ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் இயல்புநிலைக்கேற்ப பாடநெறிகளை தெரிவு செய்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியதுடன் இதற்கான ஒத்துழைப்பை பெற்றோர்கள் வழங்க வேண்டும் எனவும் அறிவறுத்தல் வழங்கினர்.
மேலும் எதிர்கால சவால்மிக்க உலகிற்கு ஈடு கொடுக்கும் வகையில் மாணவர்களின் ஆற்றல்களை வளர்க்கவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.
இதேநேரம் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்ததுடன் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க தங்களால் முடிந்த அத்தனை வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதாக குறிப்பிட்டனர்.
நிறைவாக வழிகாட்டல் கருத்தரங்கினை ஏற்பாடு செய்த பழைய மாணவர்கள் சங்கத்திற்கு பிரதி அதிபரினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment