(கனகராசா தர்சன்)
யாழ் நல்லுார் கச்சேரி வீதியைச் சேர்ந்தவரும், மேல் நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளருமான திருமதி கேமலதா சிவரூபன் (42 வயது) மாரடைப்பால் இன்று காலமானார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவரும் சைவ மகா சபையின் உபதலைவரும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவருமான திரு.த.சிவரூபன் அவர்களின் மனைவியான இவர், ஒரு பிள்ளையின் தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் திடீர் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் இறையருளை வேண்டுகிறேன்.
இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெறும்
www.ceylon24.com தமது ஆழ்ந்த இரங்கல்களைக் காணிக்கையாக்குகின்றது.
Post a Comment
Post a Comment