(க.கிஷாந்தன்)
நாட்டில் இன்று பாடசாலை கட்டமைப்புக்குள்ளும் போதைப்பொருள் ஊடுருவியுள்ளமை அச்சுறுத்தலான விடயமாகும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதனால்தான் போதைப்பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு காத்திரமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பெற்றோர்கள் உட்பட அனைவரும் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
அட்டன் வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைள் தொடர்பான சந்திப்பும், கலந்துரையாடலும் அட்டன் ஹைலண்ஸ் கல்லுரி கேட்போர் கூடத்தில் இன்று (19.12.2022) இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அ.அரவிந்தகுமார் கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.ராமேஷ்வரன் கலந்து கொண்டார்.
அத்தோடு, கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான கல்வி பணிப்பாளர் சு.முரளிதரன், அட்டன் வலய கல்வி பணிப்பாளர் திருமதி. ஏ.சத்தியேந்திரா, உதவி கல்வி பணிப்பாளர்கள் திருமதி, லக்ஷமி பிரபா, என்.சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் ஒருபுறமும் மறுபுறத்தில் சமூக நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதில் இந்த போதைப்பொருள் விவகாரமானது சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக போதைப்பொருள் மாத்தியாக்களால் பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.அதாவது அதாவது போதைப்பொருள் வலையமைப்பானது இன்று பாடசாலை கட்டமைப்புக்குள்ளும் ஊடுருவியுள்ளது.
Post a Comment
Post a Comment