அதிபர்களுக்கான பணி நயப்பு:
அக்கரைப்பற்று வலயத்தில் கடமையாற்றி இன்று இறுதி ஒப்பத்தோடு ஓய்வு பெற்றுச் செல்லும் எட்டு அதிபர்களையும் கௌரவிக்கும் நிகழ்வானது அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். றஹ்மத்துல்லாஹ் தலைமையில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி. பஸ்மில் அவர்களின் நெறிப்படுத்தலில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் சிறப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர்களான றகீம், லத்திப், ஜகுபர் சாதிக், நவாஸ், நஸீர், ஹையு, நியாஸ், முசம்மில் ஆகிய அதிபர்களுக்கு பொன்னாடை போற்றி பணிநயப்பு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
மேலும் ஓய்வு பெற்று இன்று செல்லவுள்ள உதவிக்கல்விப் பணிப்பாளர், யூசுப், கோட்டக் கல்விப் பணிப்பாளர் (அட்டாளைச் சேனை) ஹஸ்ஸாலி ஆகியோர்களுக்கான பாராட்டும் வாழ்த்தும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்றுச் செல்பவர்களின் அனுபவப் பகிர்வுகள் சிறப்பான முறையில் அமைந்தன.
ஹஸ்ஸாலி சேர் அவர்களின் ஹாசியமான பேச்சும் முசம்மில் சேர் அவர்களின் கவிதையும், யூசுப் சேரின் பிரக்ஞை பூர்வமான உரையாடலும் இனித்துக் கொண்டமை இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.
வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய நிகழ்வு பாராட்டுக்குரியது.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான ஹசீன் பாத்திமா, அப்துல் வஹாப், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான நௌபர்டின், ஜனோபர், ஆகியோர்களும், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment