கௌரவிப்பு விழா




 


மண்முனை தென்மேற்கு பல்நோக்கு கூட்டுறவு சங்கம்  கூட்டுறவு பணியாளர்களுக்கான கௌரவிப்பு விழாவை நேற்று முன்தினம் நடத்தியது.


சங்கத் தலைவர் ஏ. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொறியியலாளர். என் சிவலிங்கம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே .வி .தங்கவேல் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

 அங்கு முனைக்காடு நாகசக்தி கலா மன்றத்தின் பாரம்பரிய நாட்டுக்கூத்து நிகழ்வு விசேஷமாக இடம்பெற்றது.

 அங்கு சாதனை படைத்த கூட்டுறவு பணியாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டது. கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும் அதிபருமான சிவ.அகிலேஸ்வரனும் உரையாற்றினார்.  கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் க. சுதாகரன் நன்றியுரையாற்றினார்.
கூடவே வருட இறுதி நிகழ்வுகளும் நடைபெற்றன.