( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை வலயக் கல்விக் காரியாலயம் புதிய கட்டடத்துக்கு இடம் மாறி உள்ளது.
இக் காரியாலயம் இதுவரை காலமும் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் பாடசாலையில் இயங்கி வந்தது.
கல்முனை கல்வி வலய காரியாலயம் சுனாமிக்கு பிற்பாடு தற்காலிகமாக மேற்படி பாடசாலையில் கடந்த 16 வருடங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் இயங்கி வந்தது.
இதனை நிரந்தரமாக புதிய வசதிகள் நிறைந்த கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கல்முனைக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட புதிய வலயகல்வி பணிப்பாளர் எம்எஸ் எஸ். சஹதுல் நஜீம் துரித நடவடிக்கை எடுத்தார்.
மூன்றரை மாத காலத்திற்குள் புதிய கட்டடத்துக்கு இடமாற்ற கட்டடம் தயாரானது.
அதன்படி கடந்தவாரம் பால் காய்ச்சி விருந்துடன் புதிய கட்டிடத்திற்கு காரியாலயம் இடம் மாறி உள்ளது.
கல்முனை வாடிவீட்டு வீதியில் உவெஸ்லி கல்லூரியின் தென்புற வாயிலை தாண்டியவுடன் வலது பக்க வீதியிலே இந்த காரியாலயம் கம்பீரமாக காட்சியளிக்கின்றது
Post a Comment
Post a Comment