(வி.ரி. சகாதேவராஜா)
திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் சமய ஆன்மிக சமுகப்பணி களில் ஆர்வத்துடன் பணியாற்றிய
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் பிரதம நிருவாக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றும் ஆ.சசிந்திரன்
வாகன விபத்தில் உயிரிழந்தார்... என்ற செய்தி திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தை சோகத் தில் ஆழத்தியது.ஆழ்ந்ந அனுதாபங்கள்.
இவ்வாறு தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் கண.இராஜரெத்தினம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருக்கோவில் பிரதேச செயலக பிரதம நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் நேற்று முன்தினம் விபத்தில் அகால மரணமடைந்ததை முன்னிட்டு இந்த அனுதாபச் செய்தி வெளியிட்டுள்ளது
அச் செய்தி மேலும் கூறுகையில்..
சசீந்திரன் சிறந்த சமூக சேவையாளர் அறநெறி தழைத்தோங்க வித்திட்ட பெரும் மகன
வார்த்தைகளில் வடித்துவிட முடியாத பெருந்துயரம் அவரின் மறைவு.
அவர் வாழ்ந்த நாட்களை நோக்கி என் மனம் பின்செல்கின்றபோது அந்தக் காலங்கள் மீண்டு வரப்போவதில்லை எனும் யதார்த்தம் பலநூறு பாறாங்கற்கள் ஒன்றாக என் மேல் மோதி வலி
நாங்கள் அவரை உயிருக்குயிராய் நேசித்தோம். நிதர்சனம உயர்வுகளைக் கண்டு மனம் பூரித்தவர். சிறப்பான புத்திமதிகள் கூறி வழிநடாத்தியவர். கிடைத்த தொழிலை மிகவும் நேசித்து மிகச் சிறப்பாக வேலை செய்யவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் சிறப்பாகப் பேசக் கூடியவராக இருந்தமையும் சிறப்பான ஆளுமையுடன் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுடனும் தொடர்பாடல் செய்யும் திறனைக் கொண்டிருந்தமை அவர் உண்மையிலேயே ஒரு வழிகாட்டியாகவும் மரியாதையுடன் பலரினதும் அன்பைப் பெற்றவராக வாழ்ந்தவர். இன்று அவர் எம்முடன் இல்லை. மரணம் என்பது மாற்ற முடியாத நியதி என்று பலரும் ஆறுதல் கூறினாலும் அவரின் இழப்பை என்னால் ஜீரணிக்க முடியாமல்தான் உள்ளது.
எல்லாம் வல்ல ஆண்டவரே, உங்களின் திருவடிகளின் கீழ் நித்தியமான பேரானந்தப் பெருவாழ்வை நீங்கள் வழங்கிட வேண்டுமென்று மனதார வேண்டுகின்றேன்.
Post a Comment
Post a Comment