காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.





 ( வி.ரி. சகாதேவராஜா)


 காரைதீவு பிரதேச சபையின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் இன்று (5)திங்கட்கிழமை ஏக மனதாக நிறைவேறியது.

 சபையின் 58 வது மாதாந்த அமர்வு இன்று திங்கட்கிழமை சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

 அவ்வயம் ஒன்பது உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

 அடுத்த வருடத்திற்கான இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.

 அதன்படி ஏகமனதாக இந்த ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் நிறைவேறி இருக்கின்றது.

 இன்றைய அமர்வில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்தபோது உப தவிசாளர் ஏ.எம்.ஜாகீர் மற்றும் உறுப்பினர்களான ஏ.எல். ஜலீல், கே.ஜெயதாசன் ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை.

இன்றைய அமர்வில் காரைதீவு விபுலானந்தா தேசிய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களான மாணவர்கள் மற்றும் அதிபர் ம.சுந்தரராஜன் ஆசிரியர் எஸ். இராஜேந்திரன் ஆகியோருடன் சமூக மளித்து சபை அமர்வை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

சபை அமர்வின் இறுதி நேரத்தில் உபதவிசாளர்  ஜாகீர் சமுகளித்திருந்தார்.

 காரைதீவு பிரதேச சபை வரலாற்றில் ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்து ஏகமனதாக நிறைவேறியமை இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வசமுடைய காரைதீவு பிரதேச சபை மீண்டும் வெற்றியடைந்திருக்கிறது. 4 உறுப்பினர்களை கொண்ட காரைதீவு பிரதேச சபை 12 பிரதிநிதிகளை கொண்ட சபை தொடர்ந்து வரவு செலவு திட்டம் வெற்றி பெற்று வருவது ஊருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பெருமையாகும் என பல உறுப்பினர் உரை நிகழ்த்தினர்.