நூருல் ஹுதா உமர்
மக்களுக்கு இலகுவாக போசணை உணவை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் நாடு பூராகவும் “ஹெல பொஜூன் (சுதேச உணவகம்)" எனும் ஆரோக்கிய உணவுச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தவகையில், இறக்காமம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு இயங்கிவந்த “ஹெல பொஜூன்" நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணாக சில காலமாக மூடப்பட்டிருந்தது. இந்த சுதேச உணவகத்தினை இறக்காமம் பிரதேச செயலாளரின் வழிகாட்டலுடன் இறக்காமம் மகளீர் அபிவிருத்தி சங்கங்களின் பங்களிப்போடு மீண்டும் திறந்துவைக்கும் நிகழ்வு இறக்காமத்தில் இடம்பெற்றது.
பெண்கள் வெளிக்கள உத்தியோகத்தர் ஆர்.எஸ். றிஸ்மியா ஜஹான், பாதிக்கப்பட்ட பெண்கள்அமைப்பின் பிரதேச ஒருங்கினைப்பாளர் எஸ்.டீ. நஜீமியா ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.ரஷ்ஷான் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் திட்ட முகாமையாளர் திருமதி வாணி விஷேட அதிதியாக கலந்து கொண்டார். மேலும் பிரதேச செயலக கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர் எச்.பி. யசரட்ன பண்டார உட்பட கிராம உத்தியோகத்தர்களான யூ.எல்.அமீர், ஏ.சி.எம். சமீர் சிறு கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.எம். ஹஸ்பி, எச்.எம். இஸ்ரத் அலி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பெண் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ் ஹெல பொஜூன் உணவகத்தில் தமது உணவு உற்பத்திகளை செய்வதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு நிதிப் பங்களிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment