களப் பரிசோதனை




 


( வி.ரி. சகாதேவராஜா)


 காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் தஸ்ஸீமா வசீர்  தலைமையில்  காரைதீவு 12 மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் விசேட டெங்கு கள பரிசோதனை நேற்றுமுன்தினம் (29) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

நேற்றுமுன்தினம் மட்டும் 469   வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டன. 
டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை வைத்திருந்த 16 வீடுகளுக்கு சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.

இப் பரிசோதனை யில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள், காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,GN,EDO,SDO, போலீஸ்   உத்தியோகத்தர்களும்,பொதுமக்களும் இணைந்து டெங்கு தள தடுப்பு பரிசோதனையில் கலந்து கொண்டார்கள்.