யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 63 வயதுடைய நபர் மரணம்




 


(வி.சுகிர்தகுமார்)

  யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 63 வயதுடைய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவற்காட்டைச் சேர்ந்த சபாபதி கந்தசாமி நேற்று காலமானார்.

கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி பொத்தானை வயல் பிரதேசத்தில் வைத்து விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த வேளை இவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 52 நாட்களின் பின்னர் நேற்று மரணமடைந்த அவரின் இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் இன்று நடைபெற்று அக்கரைப்பற்று இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்மைக்காலமாக வயல் பிரதேசத்தில் மாத்திரமன்றி குடியிருப்பு பகுதிகளிலும் யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.