யாழில் பாடசாலை,பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்துவந்த 19 வயது வியாபாரி 5 ஆயிரம் போதை மாத்திரையுடன் கைது!!
(கனகராசா சரவணன்)
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி போதை மாத்திரை விற்பனை செய்துவந்த 19 வயதுடைய வியாபாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (28) மாலை 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான நேற்று அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த அந்த 19 வயது இளைணை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 5 ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டனர்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்திஇந்த போதைப் பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கோண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment