ஆலையடிவேம்பு,இதுவரையில் 137 பேர் டெங்கின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்




 


(வி.சுகிர்தகுமார்)


  ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவுகளில் டெங்கின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையிலும் இதுவரையில் 137 பேர் டெங்கின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

 இந்நிலையில்  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலனின் உத்தரவிற்கு அமைய பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைவாக இன்று அக்கரைப்பற்று 7 இன் கீழ் 1 பிரிவின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பகுதிகள் யாவும் டெங்கொழிப்பு வேலைத்திட்டம் இடம்பெற்றதுடன் குடியிருப்புக்கள் யாவும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

கிராம அபிவிருத்தி சங்க தலைவர் என்.ரதீசன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இப்பணியில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் சசிந்திரன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் மோகனதாஸ் உள்ளிட்ட இராணுவத்தினர்  கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குடியிருப்புக்கள் பாடசாலை கட்டடங்கள் பொது இடங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் 02 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டதுடன் 48 மணித்தியாலங்களுக்குள்  துப்பரவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு இடப்பட்டதுடன்   டெங்கு பரவும் அபாய இடங்களாக  சில குடியிருப்புக்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்;டது.

நாட்டில் டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மாத்திரமின்றி அரச திணக்களங்;கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் டெங்கொழிப்பு சிரமதானங்களை மேற்கொள்ளுமாறு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி  திருமதி எஸ்.அகிலன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பரிசோதனை நடவடிக்கையினையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.