மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் W
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மட் டக்களப்பு மாவட்டத்தில் 115 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறத்தவறியுள்ளனர்.
கல்குடா கல்வி வலயத்திலேயே அதிகளவான மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறத் தவறியுள்ளனர். குறிப்பாக அங்கு 47 மாணவர்கள் சித்தி பெறத்தவறியுள்ளதுடன் மட்டக்களப்பு மத்தி வலயத்தில் 24 மாணவர்களும் பட்டிருப்பு கல்வி வலயத்தில் 20 மாணவர்களும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 17 மாணவர்களும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஏழு மாணவர்களுமாக மொத்தம் 115 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#வீரகேசரி
Post a Comment
Post a Comment