100 வலயங்களில் மட்டக்களப்பு வலயம் முதலிடம்




 


( வி.ரி. சகாதேவராஜா) 

அண்மையில் வெளியான க.பொ.த. 
2021(22)சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்  பரீட்சை திணைக்களம் பகுப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 9 மாகாணங்களில் தென் மாகாணம் முதலிடம் வகிக்கிறது. 25 மாவட்டங்களில் மாத்தறை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அதேவேளை 100 வலயங்களில் மட்டக்களப்பு வலயம் முதலிடம் வகிக்கிறது.

மாகாணத்தை பொறுத்தவரை தென் மாகாணம் முதலிடத்தையும் மேல் மாகாணம் இரண்டாம் இடத்தையும் சபரகமுவா மாகாணம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
கிழக்கு மாகாணம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

மாவட்டத்தை பொறுத்தவரையில் மாத்தறை மாவட்டம் முதலிடத்தையும் கொழும்பு மாவட்டம் இரண்டாம் இடத்தையும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
வலயங்களைப் பொறுத்தவரை மட்டக்களப்பு வலயம் முதலிடத்தையும் கண்டி வலயம் இரண்டாம் இடத்தையும் வலஸ்முல்ல வலயம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.