PSSP செயற்றிட்டத்தின் மீளாய்வுக் கூட்டம்




 


நூருல் ஹுதா உமர்


உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP  செயற்றிட்டத்தின் மீளாய்வுக் கூட்டம்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் ரிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம் .பீ அப்துல் வாஜித் மற்றும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர்  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று 2022.11.04ஆம் திகதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  PSSP செயற்றிட்டம் அமுல்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகளின் பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார வைத்திய பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் சுகாதார உத்தியோகத்தர்கள் பங்கு பற்றியதுடன் தத்தமது வைத்தியசாலைகளின் அபிவிருத்தி அறிக்கைகள் தொடர்பிலான விவரத்தையும் சமர்ப்பித்தனர்.

 இதன் போது PSSP செயற்றிட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் சவால்கள் மற்றும் தடைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பிலான கலந்தாலோசனை  மேற்கொள்ளப்பட்டதுடன் பிரதி பணிப்பாளரும் தேசிய சுகாதார மக்கள் முறைப்பாட்டுக் குழுவின் உறுப்பினருமான  வைத்தியர் எம்.பீ.ஏ.வாஜித் அவர்களினால் வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் முறைப்பாட்டுப் பிரிவு தொடர்பிலான விவரணமும் தெளிவுபடுத்தப்பட்டது

UMAR LEBBE NOORUL HUTHA