EFCITA) வினால் 29 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்கள் வழங்கி வைப்பு




 .


சுகிர்தகுமார்  

  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு தேவையான 29 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினரால்  (EFCITA)    இன்று வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டன.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் யு.எம்.எல்.சகீல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைப்பின் சார்பில் கலந்து கொண்;ட பிரபல வர்த்தகர் சி.பரநாதன் கலந்து கொண்டு மருந்துப்பொருட்களை கையளித்தார்.

நிகழ்வில் வைத்தியரும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் செயலாளருமான சித்ரா தேவராஜன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் உதவிச் செயலாளருமான வி.பபாகரன்; பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் குணாளினி சிவராஜ் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான எஸ்.புண்ணியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர் வைத்தியர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளை வைத்தியசாலை அபிவிருத்திக்குழு வைத்திய குழாமினர் இணைந்து வரவேற்றனர்.

தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பொறுப்பதிகாரி வைத்தியர் யு.எம்.எல். சகீல் வைத்தியசாலையின் தற்போது மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆனாலும் நாளாந்தம் 200 இற்கும் மேற்பட்டவர்கள் நாளாந்தம் வெளி நோயாளர் பிரிவிற்கு வருகை தருகின்றனர். இருப்பினும் அவ்வாறு வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளிகளுக்கு தேவையான எல்லா மருந்துகளை வழங்க முடியாத நிலையில் பெரும் கவலையடைந்துள்ளோம். இந்நிலையில் குறித்த அமைப்பினர் வழங்கிய மருந்துகளை உவகையுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதனை பெற்று கொடுத்த அமைப்பினருக்கும்  பிரபல வர்த்தகர் சி.பரநாதனுக்கும் நன்றி கூறினார்.

இங்கு உரையாற்றிய பிரபல வர்த்தகர் சி.பரநாதன் தமது அமைப்பினால் பல்வேறு சமூகப்பணிகள் அவ்வப்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே இக்கட்டான இச்சூழ்நிலையில் குறித்த மருந்துப்பொருட்கள் கையளிக்கப்படுவதாக கூறினார்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளரும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் உதவிச் செயலாளருமான வி.பபாகரன் குறித்த மருந்துகள் மாத்திரமன்றி பராநாதன் அவர்களது சொந்த நிதியில் இருந்து வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட 6 இலட்சம் பெறுமதியான இன்வென்டர் மின் சாதனத்தையும் நினைவூட்டி நன்றி கூறினார்.

கூறினார்.


நன்றியுரை வழங்கிய வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் செயலாளருமான சித்ரா தேவராஜன் குறித்த மருந்துப்பொருட்களை பெற்றுக்கொடுக்கும் முயற்சிக்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி ஒவ்வொருவருக்கும் நன்றி கூறினார்.


இதன் பின்னர் உத்தியோகபூர்வமான முறையில் மருந்துப்பொருட்கள் பிரபல வர்த்தகர் சி.பரநாதனினால் வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டன.