றோட்டரிக்கழக புதிய தலைவர் பதவியேற்பு வைபவம்!





 ( வி.ரி.சகாதேவராஜா)


 கல்முனை றோட்டரிக் கழகத்தின் 22 வது தலைவராக றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் நாளை மறுநாள் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பதவி பிரமாணம் செய்ய இருக்கின்றார்.

 புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினது பதவியேற்பு வைபவம் காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் இடம்பெற இருக்கிறது.


 பிரதம அதிதியாக மாவட்ட ஆளுநர் றோட்டரி மாவட்ட ஆளுநர் றோட்டரியன் புவுது டி சொய்சா மற்றும் கௌரவ அதிதியாக காரைதீவுப்பிரதேச செயலாளர்  சிவ.ஜெகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் .

இதன்போது இவ்  வருடம் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது .

புதிய தலைவராக நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாறு நிலைய பொறுப்பதிகாரிறோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன், புதிய செயலாளராக றோட்டரியன் கே.குகதாஸன்,  புதிய செயலாளராக றோட்டரியன் எம்.சிவபாத சுந்தரம் மற்றும் புதிய பணிப்பாளர் சபையினர் பதவியேற்க இருக்கிறார்கள்