போஷாக்கு திட்டம்




 


நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனை பிராந்தியத்தில் உள்ள கல்வி நிலையங்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கான போசாக்கு திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் கடந்த வியாழக்கிழமை நிந்தவூர் கமு/கமு/ இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ. .றிபாஸ் விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன்  போஷாக்கு திட்டத்தை முன்னெடுப்தற்காக மரங்கள் நடக்கூடிய இடங்களையும் தெரிவு செய்தார்.

குறித்த கள விஜயத்தின் போது சுகாதார பணிப்பாளர் பாடசாலை மாணவர்களுக்கு உளவளத்துணை மற்றும் நேரமுகாமைத்துவம் தொடர்பான பயிற்சி விரிவுரை ஒன்றையும் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பணிப்பாளரினால் எடுக்கப்படும் இவ்வாறான நிகழ்வுகளை பாராட்டி பாடசாலை அதிபரினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ நபீல் உள்ளிட்ட குழுவினரும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களும் பங்குபற்றியதுடன்  இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பணிப்பாளரினால் பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது