”வாழும் போதே வழங்கிடுவோம்”




 


வி.சுகிர்தகுமார் 


  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னப்பனங்காடு மகாசக்தி பாலர் பாடசாலையின் சிறுவர் பூங்கா சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரால் முழுவதுமாக புணர் நிர்மானம் செய்யப்பட்டு இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

புலம்பெயர்ந்து வாழும்; புஸ்பநாதனின் நிதிப்பங்களிப்போடு சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் கணேசபிள்ளை சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டில் இப்பூங்காவின் புணர் நிர்மானம் இடம்பெற்றது.

சின்னப்பனங்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரும் அமைப்பின் திட்டங்களை முன்னெடுத்து செல்பவருமான சுவர்ணராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் சின்னப்பனங்காடு முதியோர் சங்க தலைவர் ரகுநாதன் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலய தலைவர் மேகராசா கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் அனுராதா சங்கத்தின் உறுப்பினர்கள் உதயகுமார் ரஞ்சன் உள்ளிட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு வருகை தந்தவர்களை மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அதிதிகள் இணைந்து பாலர் பாடசாலை பூங்காவின் பெயர்ப்பலகையினை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து சிறுவர் பூங்காவின் விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினர் பாலர் பாடசாலை உள்ளிட்ட அரச பாடசாலைகளிலும் பல்வேறு கல்வி அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.