கல்முனை பற்றிமா சாதனை!





(வி.ரி.சகாதேவராஜா)

அண்மையில் வெளியான க.பொ.த.சாதாரண தரப் பரிட்சை பெறுபேறுகளின்படி, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி சாதனை படைத்து முன்னணியில் உள்ளது.

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இம்முறை க.பொத. சா.த பரீட்சையில் 32மாணவர்கள் 9ஏ சித்திகள் பெற்றுச்சாதனை படைத்துள்ளனர் என்று அதிபர் அருட்சகோ. செபமாலை சந்தியாகு தெரிவித்தார்.

அங்கு மேலும் 20  மாணவர்கள் 8ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் சித்திபெற்றுள்ளனரென்று மேலும் அவர் தெரிவித்தார்.

236மாணவர்கள் தோற்றியதில்  227மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.96 வீத சித்தி. இது கல்முனை வலயத்திலே உள்ள சா.தர வகுப்புகளுள்ள 33  பாடசாலைகளுள் முதலாவது அதிகூடிய சித்தி வீதமாகும்.

இது வரலாற்றில் சிறப்பான பெறுபேறு என்றும் இதற்காக உழைத்த ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கல்விஅதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகூறுவதாக அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தனியொரு பாடசாலை அதிகூடிய 32 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.