(சுகிர்தகுமார்)
ஜந்து அடி கற்சிலை அமைந்துள்ளதும் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த மருத மரத்தை தல விருட்சமாகவும் கொண்ட அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் பாலாலய கும்பாபிசேகம் நேற்று (07) இடம்பெற்றது.
ஜந்து முகங்களுடன் ஐந்தடி உயரத்தில் திருக்காட்சி தரும் ஸ்ரீP இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் கற்சிலை அமைந்துள்ள ஆலயங்களில் முக்கியத்துவம் மிக்கதான இவ்வாலயத்தின் பாலாலய கும்பாபிசேகம விசேட பூளைகளானது கடந்த 05 ஆம் திகதி கர்மராம்ப கிரியைகளோடு ஆரம்பமாகி 06ஆம் திகதி இடம்பெற்ற கிரியைகளோடும் நேற்று இடம்பெற்ற இடம்பெற்ற பாலாலய கும்பாபிசேகத்துடனும் நிறைவுற்றது.
அதிசயம் மிக்க இப்பெருமைமிகு ஆலயமானது குருதேவர் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் ஹனுமன்தாசன் ராம்ஜி சுவாமிகளின் வழிகாட்டலுடன் நடைபெற்று வருகின்றது.
இன்று காலை குரு பூஜை நடைபெற்றதுடன் பாலாலய கும்பாபிசேகத்தின் நடைபெற்று விசேட பூஜைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து விசேட யாகபூஜைகள் ஆரம்பமானதுடன்; பிரதான கும்ப வெளிவீதி உலாவும் இடம்பெற்றது.
வெளிவீதி உலாவாக எடுத்துவரப்பட்ட பிரதான கும்பம் ஆஞ்சநேய சுவாமி மீது சொரியப்பட்டதுடன் பரிவார மூர்த்திகள் மீதும் கும்பங்கள் சொரியப்பட்டு 108 ஆஞ்சநேய மந்திர உச்சாடணமும் பூஜையும் நடைபெற்றதன் பின்னர் பாலாலய பூஜைகள் நிறைவுற்றது.
காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் ஆசிர்வாதத்தோடு ஆலய பரிபாலகர் நல்லதம்பி கந்தசாமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கிரியைகள் யாவற்றையும் கிரியாகலாநிதி வித்தியாசாதகர் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்ணிய கிருஸ்ணகுமாரக்குருக்கள் தலைமையில் கிரியாகிரம ஜோதி அலங்கார பூசனம் சிவாகமபானு அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ சு.சுதர்சன் குருக்கள் சிவஸ்ரீ சோ.கோகுலதாச சர்மா ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ த.குகனேஸ்வர சர்மா ஆகியோர் நடாத்தி வைத்தனர்

Post a Comment
Post a Comment