சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.




 


(சுகிர்தகுமார்)


  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.

அடை மழை காரணமாக ஆற்றை அண்டிய வயல் பிரதேசங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுளளதாகவும்; விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்ததை அடுத்து களநிலவரத்தை ஆராய்ந்த பின்னரே ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்; பிரகாரம் சின்னமுகத்துவார ஆற்றுமுகப்பிரதேசத்தை அகழ்ந்து மேலதிக நீரை வெளியேற்றி விதைக்கப்பட்ட வயல் நிலங்களை பாதுகாத்து விவசாயிகளை பாதுகாக்கும் முகமாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முக்கிய தரப்பினருடனும் கலந்துரையாடி அவசியதேவை கருதி முகத்துவாரம் அகழ்ந்துவிடப்பட்டது.

இந்நடவடிக்கையின் போது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர் பி.கிருசாந்தன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி;.மதிசுதன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.அரியநாயகம் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாயிருந்தனர்.