அமைச்சர் டக்ளஸ் பிறந்த தினத்திற்கு சர்வதேச இந்துமதபீடம் ஆசி




 


அமைச்சர் டக்ளஸ் பிறந்த தினத்திற்கு சர்வதேச இந்துமதபீடம் ஆசி.


ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மீன்பிடி துறை கடல்வள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனைது 65ஆவது அகவையில் தடம் பதிக்கின்றார். இவர் என்றும் தமிழ் மக்களுக்கான சேவையை முன்னெடுப்பதில் அல்லும் பகலுமாக செயற்படுபவர். குறிப்பாக வடக்கு மக்களுக்கு தனது அரசியல் வாழ்வில் அர்பணிப்புடன் சேவைகளை முன்னெடுத்துவருகின்றார்.


எப்பொழுதும் யதார்தத்மாக சிந்திக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மென்மேலும் அவரது சேவையை தொடரவும் அவரது அரசியல்  வாழ்வு பலமடையவும் சர்வதேச இந்துமத பபீடம் சார்பாக இறைவனை மனதார பிரார்த்தித்து ஆசிகளையும் வாழ்த்துக்களையும் அதன் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா தனது வாழ்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.