உணவுப்பயிர்ச்செய்கையினை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம்




 


வி.சுகிர்தகுமார்  


  ஆலையடிவேம்பு  பிரதேசத்தில் வயல்  வரம்புகளில் உணவுப்பயிர்ச்செய்கையினை  முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இன்றும் விவசாயிகளுக்கு பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரி.பிரபாகரன் மற்றும் எஸ்.குமுததாஸ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில்
; ஆலையடிவேம்பு  பிரதேச செயலகப்பிரிவுகுட்பட்ட விவசாயிகளுக்கான பயிர் விதைகள் வழங்கல் மற்றும் பயிர்விதைகள் நடுகை நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்து கொண்டு திட்டத்தை திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் அக்கரைப்பற்று கிழக்கு  விவசாய போதானாசிரியர் எம்.எச்.எம்.சஜாத் கலந்து கொண்டு பயிர் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

தேசிய உணவுப்பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் வயல்  வரம்புகளில் உணவுப்பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் முகமாக நடைபெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு  பிரதேச விவசாயிகளுக்கு மரக்கறி விதைகள்; வழங்கி வைக்கட்டதுடன் பயிர்செய்கையின் விதைகள் நடும் நிகழ்வும் இத்தியடி பிரதேச வயல் நிலங்களில் இடம்பெற்றது.


நிகழ்வில் நாவற்காடு கமக்காரர் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.