வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் இயங்கிவரும் விஸ்ணு மகளிர் ஆடை உற்பத்தி கைத்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குளோபல் ரிலையன்ஸ் இன்வெஸ்ட்மன்ட் கம்பனியின் கிளை இன்று கோளாவில் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மக்களது பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடனும் விவசாயிகள் எதிர்கொண்டு வரும் உரம் மற்றும் நெல் விற்பனை தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வை பெற்றுக்கொடுத்தல் மற்றும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை இலக்காக கொண்டும் இக்கம்பனி கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இக்கம்பனியின் பணிப்பாளர் த.ஜெயாகர் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் மற்றும் இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளை ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் தமிழ் இலக்கிய பேரவை தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி ஓய்வு நிலை அதிபர் தணிகாசலம் ஆலயத்தலைவர் ஏரம்பமூர்த்தி மகாசக்தி அமைப்பின் செயலாளர் திலகராஜன் மற்றும் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பூஜை வழிபாடுகளை கோளாவில் விக்னேஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கௌரிசங்கர் குருக்கள் நடாத்தி வைத்தார்.
பின்னர் அதிதிகள் இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்ததுடன் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment