நூருல் ஹுதா உமர்
உலக வங்கி மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு இணைந்து அமுல்படுத்தும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான PSSP எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் தொற்ற நோய்கள் சம்பந்தமான பயிற்சிப்பட்டறை பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிப்பட்டறையில் தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத் பிரதான வளவாளராக கலந்து கொண்டதுடன் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ அப்துல் வாஜித் விசேட பயிற்சிகளையும் பொதுமக்கள் முறைப்பாட்டு மைய நிறுவுகையின் அவசியம் பற்றியும் வழிகாட்டல்களை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வின் ஆரம்ப தினத்தில் தர முகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் பீ.ஜீ.பீ.டேணியல் அவர்களினால் உத்தியோகத்தர்களின் வேலை பிரிப்பு மற்றும் பொறுப்புக்களை நேர்த்தியாக செய்தல் தொடர்பில் விசேட உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது. மூன்று நாள் பயிற்சியை பெற்றுக்கொண்ட குறித்த தாதிய உத்தியோகத்தர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்து வைத்தியசாலைகளில் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதுடன் அதனை கணினியில் பதிவேற்றம் செய்து பொதுமக்கள் முறைப்பாட்டு மையத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்காக அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .
Post a Comment
Post a Comment