.
சுகிர்தகுமார்
அம்பாறை, திருக்கோவில், கஞ்சிகுடிச்சாற்றில் அமைந்துள்ள மாவீரர்களின் துயிலும் இல்லத்தில்; இன்று (27) மாலை தமிழரின் தேசிய மாவீரர் நாள் மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்; கவீந்திரன் கோடீஸ்வரன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் மாணவர் மீட்பு பேரவைத்தலைவர் கணேஸ் பொத்துவில் பிரதேச சபை உபதவிசாளர் பார்த்தீபன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் உறவுகளை இழந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
மாலை 6.05 மணிக்கு ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களுக்கான பொதுச் சுடரினை மாவீரரின் தாய் ஒருவர் ஏற்றி வைத்ததுடன் பாராளுமன்ற உறுப்பினரும் ஏனைய உறவினர்களும் சுடரினை ஏற்றி வைத்தனர்.
கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள்; துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.
பின்னர்; நடைபெறாமல் இருந்த நினைவேந்தல் நிகழ்வு 11வருடங்களின் பின் 2017ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றது.
அதன் பின்னராக 2020ஆம் ஆண்டின் ஆட்சி; மாற்றம் காரணமாக தடைப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வு கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் இவ்வருடம் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
; இத்துயிலும் இல்லத்தில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்

Post a Comment
Post a Comment