இலவச கொரிய மொழி பயிற்சிநெறி !




 


நூருல் ஹுதா உமர்


இளைஞர் வலூவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் சம்மாந்துறை பிரதேச சபையினால் நடாத்தும் இலவச கொரிய மொழி பயிற்சி பாடநெறி அங்குராப்பண நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.முஹம்மட் நௌசாட் அவர்களின் தலைமையில் அமீர் அலி பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சு முகம்மட், பிரதேச சபை உறுப்பினர்களான யூ.எல்.அஸ்பர், என்.கோவிந்தசாமி, ஏ.எம்.எம்.றியாஸ், எம்.எஸ்.சரீபா, கொரிய மொழி போதனாசிரியர் வை.வீ.எம்.நபாஸ், அமீர் அலி பொதுநூலக நூலகர் ஏ.ஆர்.எம்.இல்யாஸ், பிரதேச சபையின் கொரிய மொழி பயிற்சி நெறிக்கான இணைப்பாளர் ஐ.எல்.சப்றி, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மாணவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.