வி.சுகிர்தகுமார்
சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பல்வேறு செயற்றி;ட்டங்களை அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் முன்னெடுத்து வருகின்றது.
கடந்த ஆறு மாதகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இச்செயற்றிட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக பல்வேறு சமூகங்களையும் ஒன்றினைத்தான கலாசார நிகழ்வு தம்பட்டை சுவாட் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
ஒன்றாய் இணைந்து உயர்வாய் வாழ்வோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளில் பல்வேறு கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
பாதிப்புற்ற பெண்கள் அரங்க திட்ட இணைப்பாளர் நடராஜா சுமந்தி ,திட்ட பொறுப்பாளர் செல்வபதி கங்கேஸ்வரி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் அரங்கத்தின் தலைவியும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான செல்வி அனுசியா சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சர்வமத குருமார்கள் பாதிப்புற்ற பெண்கள் அரங்க இணைப்பாளர் வாணி சைமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சர்வமத குருமார்களின் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில் சமூக தலைவர்களின் உரையும் இடம்பெற்றது. அவர்களின் உரையில் சமூகங்கள் ஒற்றுமைப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இதன் பின்னராக திட்டத்தின் நோக்கம் மற்றும் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்கள் திட்டத்தின் வெற்றி போன்ற பல்வேறு விடயங்களும் பாதிப்புற்ற பெண்கள் அரங்க தலைவி உள்ளிட்ட பொறுப்பாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தும் நாடகம் கவிதை பாடல் என பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
இதேநேரம் பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களின் அனுபவ பகிர்வும் இடம்பெற்றது.
பின்னர் கலைநிகழ்வுகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வுகளில் இறக்காமம், அட்டாளைச்சேனை , பொத்துவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில்; இருந்து தெரிவு செய்யப்பட்ட மதகுருமார் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment