சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு




 


கல்முனை தாருஸபாவில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு


நூருல் ஹுதா உமர்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்முனை தாருஷபா குர்ஆன் மதரஸா மாணவர்களுக்கிடையில் மீலாத் விழா போட்டிகளாக இடம்பெற்ற இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், கௌரவிப்பும் நிகழ்வு தாருஷபா அமையத்தின் தலைவரும், பாத்திமத்துஸ் ஸஹ்ரா அரபுக்கல்லூரி அதிபருமான மௌலவி ஏ.ஆர். சபா முஹம்மத் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் தாருஷபா அமையத்தில் இன்று இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண தொல்லியல் மரபுகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினரும், பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளருமான முபீஸால் அபூபக்கர், அமானா வங்கி முகாமையாளர் எஸ்.எச்.எம். சமீம், முல்தஸம் நிறுவன பணிப்பாளர் எம்.எஸ்.எப்.ஆர்.முகத்தசி, சமூர்த்தி உத்தியோகத்தர்கள் தேசிய சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் யூ.எல். ஜௌபர், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், கல்முனை மாநகர வருமான வரி பரிசோதகர் ஏ.ஜே. சமீம், தாருஸபா அமையத்தின் உயர்பீட மற்றும் நிறைவேற்று, செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.


இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றுதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.