(வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் கல்வி வலயத்தில் இருந்து இடமாற்றம் பெற்று சம்மாந்துறை வலயத்திற்கு வருகை தந்திருக்கின்ற உதவி கல்வி பணிப்பாளர் பூ.பரமதயாளனுக்கு, கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது.
திருக்கோவில் வலயத்தில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய இலங்கை கல்வி நிர்வாக சேவையைச்சேர்ந்த பரமதயாளன் வீரமுனையைச் சேர்ந்தவர் .
கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் பி. இளங்கோ தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஊர் சார்பில் கோரக்கர் ஆலய தலைவர் வி. மோகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் .
ஆரம்பக்கல்வித்துறையில் தேர்ச்சி பெற்ற பரமதயாளன் சம்மாந்துறை வலயத்தில் ஆரம்பக் கல்வித்துறை அபிவிருத்தியிலும், நாவிதன்வெளிக்கோட்ட கல்வி அபிவிருத்தியிலும் பாரியபங்காற்ற வேண்டும் என்று வாழ்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
Post a Comment
Post a Comment