(நூருல் ஹுதா உமர்
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் மிக நீண்ட காலமாக இருந்துவரும் காணி அனுமதிப்பத்திரப் பிரச்சினைகளுக்கு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) இன் வழிகாட்டலில் துரிதகதியில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் அவை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இத்தொடரில், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, இறக்காமம் - 04, வரிப்பத்தான்சேனை - 02 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான காணி, காணி உத்தியோகத்தர் என்.எல்.எம். மாஹிரின் தலைமையில் செவ்வாய்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. காணிப் பிரிவு உத்தியோகத்தர்களான குடியேற்றவியல் உத்தியோகத்தர் ஜி.பி.என். சுரஞ்சி ஸ்ரீதாச, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.எம். சில்மி மற்றும் பிரிவிற்குரிய கிராம உத்தியோகத்தர்களான ஏ.சி.எம். சமீர், எம்.எல். கிஷோர் ஜஹான் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த பொதுமக்களுக்கான காணி அனுமதிப் பத்திரம் தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டன.
Post a Comment
Post a Comment