(க.கிஷாந்தன்)
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீப்பிட்டிய பகுதியில் 02.11.2022 அன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டனிலிருந்து நோக்கி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும், கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் நாவலப்பிட்டி மிப்பிட்டிய பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பஸ்களிலும் பயணித்தவர்களில் 10 பேர், காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பாடசாலை மாணவர்களும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் குழு ஒன்றும் அடங்குகின்றனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment