(வி.ரி. சகாதேவராஜா)
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கல்வித்துறை அமைப்பான ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளராக வெள்ளையன் வினோகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவின் ஆலோசனையின் படி
இவருக்கான நியமனக் கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வழங்கி வைத்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவர் துவார இந்துநில் அமரசேனவும் சமூகமளித்திருந்தார்.
அம்பாறை மாவட்ட கல்வித்துறை அபிவிருத்தியில் ,சங்கம் முனைப்போடு செயல்படுவதற்காக இந்த நியமனம் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வினோ காந் அவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment